2022 மே 09 அன்று காலி முகத்திடலில் நடந்த "கோட்டா கோ ஹோம்" போராட்டத்தின் மீதான தாக்குதலில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான
அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தை செல்லாததாக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில். உயர் நீதிமன்றத்தினால் இன்று (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை, நீதியரசர்களான ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட அமர்வு பிறப்பித்ததோடு, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரிக்கவும் அந்த அமர்வு அனுமதி அளித்தது.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, இந்த வழக்கின் பிரதிவாதிகளின் பட்டியல் திருத்தப்படவில்லை என்று தேசபந்து தென்னகோன் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ரொமேஷ் டி சில்வா எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.
அதன் பின்னர், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி சுஹர்ஷி ஹேரத், இந்த சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சட்டமா அதிபரினால் இரகசிய கவரில் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பல முக்கிய ஆவணங்களை மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சுமத்தினார்.